சின்மயியை கிழித்து எடுத்த நடிகர் ராதாரவி

Report Print Deepthi Deepthi in இந்தியா
1181Shares

metoo என்ற எழுச்சியை சினிமா துறையில் கொண்டுவராதீர்கள், இது ஒரு நல்ல துறை இதனை கெடுத்துவிடாதீர்கள் என்று நடிகர் ராதாதவி கூறியுள்ளார்.

இதுபோன்ற பாலியல் குற்றச்சாட்டுகள் எல்லாம் மந்திரிகள் சம்பந்தப்பட்டது, சினிமாவில் இது கிடையாது. முற்போக்காக சிந்திக்கிறேன் என்ற பெயரில் நீங்கள் தரம் தாழ்ந்துவிடாதீர்கள்.

14 வருடத்துக்கு முந்தைய நடந்த சம்பவத்தை இப்போது குற்றச்சாட்டாக வைக்கிறார் சின்மயி. அப்போது என்ன நடந்தது, இடங்கள் எப்படி இருந்தது என்பதை ஆராய முடியுமா? ஏன் அப்போது கூறியிருக்க வேண்டியதுதானே.

இப்படி ஒரு குற்றச்சாட்டை கூறி வருவதால், சினிமா துறையில் பயன்படுகிறார்கள். காரணம், ஒரு இயக்குநர் நடிகையிடம் பேசினால் கூட என்னை கிள்ளிவிட்டான் என்று சொல்லிவிடுவார்களோ என்றுதான்.

நாங்கள் சினிமாவில் நடிக்கும்போது, அனைவரும் சந்தோஷமாக இருந்துதான் படங்களை நடித்துக்கொடுத்தோம். அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். நல்ல சினிமாவை கெடுத்துவிடாதீர்கள்.

சின்மயிக்கு ஆங்கிலம் தெரிந்த காரணத்தால், அவர் பேசிக்கொண்டே செல்லலாம். ஆங்கிலம் ஒரு மொழி. அறிவு கிடையாது.

சின்மயின் 14 வருடம் கழித்த குற்றச்சாட்டை தற்போது தேட வேண்டியுள்ளது என கூறியுள்ளார். எனவே இதனை நிறுத்திக்கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்