போலி புகார்! இனி உங்க பேச்சை யார் நம்புவாங்க சின்மயி?

Report Print Raju Raju in இந்தியா
322Shares

நடன இயக்குனர் கல்யாண் மீதான பாலியல் புகார் பொய் என்று தெரிய வந்த பிறகு சின்மயியின் பேச்சை எப்படி நம்புவது என சமூகவலைதளங்களில் விவாதம் நடந்து வருகிறது.

கவிஞர் வைரமுத்து மீது பாலியல் புகார் தெரிவித்தார் பாடகி சின்மயி. அவரின் துணிச்சலை பார்த்த பலர் தங்களுக்கு நடந்த பாலியல் தொல்லைகள் குறித்த விபரங்களை அவருக்கு அனுப்பி வைக்கிறார்கள்.

அவரும் அந்த விபரங்களை டுவிட்டரில் வெளியிட்டு வருகிறார்.

அப்படி அவர் வெளியிட்ட ஒரு புகாரை பார்த்து பாடகர் ரகு தீக்சித் மன்னிப்பு கேட்டார்.

இதனால் சின்மயி சொல்வது உண்மை என நெட்டிசன்கள் பேசினார்கள்.

இதையடுத்து கல்யாண் மாஸ்டர் மீது விளையாட்டாக ஒருவர் பொய் புகார் தெரிவிக்க அதை சின்மயி வெளியிட்டார்.

அதன் பிறகு அந்த நபர் தான் விளையாட்டுக்காக அப்படி செய்ததாக கூறியதுடன் சின்மயி இப்படித் தான் யார் என்ன அனுப்பினாலும் கேள்வி கேட்காமல் ட்வீட் செய்கிறார். அவர் பேச்சை நம்ப வேண்டாம் என்றார்.

கல்யாண் மாஸ்டர் விவகாரத்திற்கு பிறகு சின்மயியின் டுவீட்டை முழுதாக நம்ப நெட்டிசன்கள் தயாராக இல்லை என்று கூறப்படுகிறது.

ஒரு வேளை இதுவும் பொய் புகாராக இருக்குமோ என்று சந்தேகப்படுகிறார்கள். சின்மயி நல்ல நோக்கத்துடன் செய்து வரும் காரியம் தற்போது சந்தேகப்படும்படி ஆகிவிட்டது.

அவர் ட்வீட்டிய பல விடயங்கள் உண்மையாக உள்ள நிலையில் ஒரு பொய் புகாரால் அவர் மீது நெட்டிசன்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்