சின்மயி-வைரமுத்து விவகாரம்! ரெட் கார்ட் கொடுக்க வேண்டும்: நடிகை காயத்ரி ஆவேசம்

Report Print Santhan in இந்தியா
1422Shares

கடந்த சில நாட்களாகவே பல ஊடகங்களில் பெரிதாக பேசப்படும் செய்தி வைரமுத்து-சின்மயி தான், காரணம் கவிஞர் வைரமுத்துவா இப்படி என்று பலரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் சின்மயி, வைரமுத்து மீது குற்றச்சாட்டை முன்வைத்தார்.

இதனால் இது உண்மையா? இல்லை டிரண்டிங் ஆக வேண்டும் என்பதற்காக செய்யப்படுகிறதா, அல்லது அரசியல் இருக்கிறதா என்ற பல கேள்விகள் எழுப்பப்படுகிறது.

இது குறித்து முன்னணி நடிகைகள் பலரிடமும் பேட்டி எடுக்கப்படுகிறது. அப்போது நடிகை வரலட்சுமி தான் இது போன்ற பிரச்சனைகளை சந்தித்துள்ளேன் என்று கூறினார். இது போன்ற பல நடிகைகள் இந்த பிரச்சனை இருக்கிறது என்று கூறி வருகின்றனர்.

இந்நிலையில் நடிகையான காயத்ரிரகுராமிடம் தனியார் ஊடகம் ஒன்று பேட்டி எடுத்துள்ளது. அதில், அனைவரும் பேசத் தயங்கும் விடயத்தை சின்மயி தைரியமாக பேசியுள்ளார், அதற்கு நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்று கேட்ட போது, இதைப் பற்றி இவர் மட்டுமின்றி சில நாட்களாக பலரும் தைரியமாக பேசி வருகின்றனர்.

சில பெண்கள் தங்களுடைய சூழ்நிலை காரணமாக பேச முடியாமல் இருக்கின்றனர். அதுமட்டுமின்றி யார் நமக்கு பயந்து போவார்கள் என்று நினைக்கிறார்களோ, அது போன்ற பெண்களையே குறி வைப்பார்கள்.

அப்படி இருக்கும் போது, நீங்கள் அதை உடனடியாக வெளியில் சொல்ல வேண்டும், மிகவும் தாமதப்படுத்தினால் உங்களின் வருங்கால வாழ்க்கை தான் பாதிக்கப்படும் என்று கூறியுள்ளார்.

திரையுலகில் எது எதுக்கோ ரெட் கார்ட் எல்லாம் கொடுக்கிறார்கள், பெண்களிடம் இப்படி தவறாக நடக்கும் ஆண்களுக்கு ரெட் கார்ட் கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

மேலும் இது போன்ற சம்பவம் எல்லாம் நான்கு சுவர்களுக்குள்ளேவோ, அல்லது சாதரணமாக பேசிக் கொண்டிருக்கும் போதே வோ தான் நடக்குமே தவிர வெட்ட வெளிச்சமாக நடக்காது, இதனால் ஆதாரங்கள் என்பது மிகவும் கஷ்டம் மக்களிடம், பொலிசாரிடம் நிரூபிப்பது கடினம் என்று கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்