வைரமுத்து சர்ச்சை...இசைஞானி இளையராஜா சொன்ன பதில் என்ன தெரியுமா?

Report Print Santhan in இந்தியா
1985Shares

இசைஞானி இளையராஜ பொதுவாக வெளி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில் அவ்வளவு ஆர்வம் காட்டமாட்டார்.

ஆனால் சமீபகாலமாக தன்னுடைய 75-வது பிறந்தநாளை முன்னிட்டு பல கல்லூரிகளுக்கு செல்லும் அவர், மாணவ மாணவிகளிடம் தன்னுடைய இசை அனுபவங்களை பகிர்ந்து வருகிறார்.

இதற்கு மாணவர்களுடையே நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.

அதன் தொடர்ச்சியாக இன்று இளையராஜா சென்னையில் இருக்கும் எம்.ஜி.ஆர்.ஜானகி மகளிர் கல்லூரி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் 4-வது தலைமுறையாக என்னுடைய பிறந்த நாளை இவ்வளவு ஆரவாரமாக கொண்டாடுவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

பள்ளிக்கே ஒதுங்காத என்னை கல்லூரி மாணவ - மாணவிகள் தங்கள் இடத்துக்கு அழைத்து என் பிறந்த நாளைக் கொண்டாடி பெருமைப்படுத்துவது மிகவும் உற்சாகமாக, பெருமையாகவும் இருக்கிறது என்று கூறினார்.

மேலும் அவர் இனி எந்த கல்லூரியில் இருந்து அழைப்பு வந்தாலும், தான் ஆர்வமுடன் கலந்து கொள்ள தயாராக இருப்பதாகவும் கூறினார்.

இதையடுத்து நிகழ்ச்சியின் முடிவில் இளையராஜாவிடம் அங்கிருந்த செய்தியாளர்கள் சில கேள்விகள் கேட்டனர். அதற்கு பதிலளித்து வந்த நிலையில், Me To பற்றி நிரூபர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

இதற்கு இளையராஜா நீ ரெம்ப நல்ல கேள்வி கேட்ருக்க, இந்த கேள்வியை கேட்டுட்டு நீ இங்கேயே இரு என்று மட்டும் பதிலளித்துவிட்டு சென்றுவிட்டார்.

இதற்கு முன்பு நடிகர் சிம்புவின் பீப் பாடல் குறித்து கேட்ட போதும், இளையராஜா கோபமாக பதிலளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்