தன் காதலியின் சந்தோஷத்திற்காக பணத்தை திருடிய கூகுள் நிறுவன ஊழியர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
கடந்த செப்டம்பர் 11-ம் தேதியன்று டெல்லி தாஜ் ஹோட்டலில் ஐபிஎம் மற்றும் பிற நிறுவனங்கள் இணைந்து ஏற்பாடு செய்த கான்ஃபிரன்ஸ் நடைபெற்றது. இதில் கூகுள் நிறுவனம் சார்பில் ஹரியானாவின் அம்பலா மாவட்டத்தில் வசிக்கும் கர்வித் சஹானி என்ற 24 வயதான இளைஞரும் கலந்துகொண்டார்.
அப்போது தேவயானி என்ற பெண் தன்னுடைய பர்சில் வைத்திருந்த ரூ.10000 பணத்தை காணவில்லை என ஹோட்டல் நிர்வாகத்திடம் புகார் அளித்தார்.
அதன்பேரில் பொலிஸாரும் வழக்கு பதிவு செய்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வந்தனர். அப்போது சஹானி, தேவயானியின் பர்ஸிலிருந்து பணத்தை எடுத்துக்கொண்டு கார் ஒன்றில் ஏறி செல்வது இடம்பெற்றிருந்தது.
இதனையடுத்து அந்த இளைஞரை கைது செய்த பொலிஸார் அவரிடம் விசாரணை மேற்கொள்கையில், தன்னுடைய காதலிக்கு செலவழிக்க பணம் இல்லாத காரணத்தினாலே திருடியதாக தெரியவந்தது. இதனையடுத்து அவரை கைதட்ட செய்து சிறையில் அடைத்தனர்.