நீதிபதி இருக்கையில் அரிவாளுடன் ஓடி வந்து உட்கார்ந்த தமிழக இளைஞர்! கமெராவில் சிக்கிய பரபரப்பு காட்சி

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் விசாரணைக்கு வந்த நபர் அரிவாளுடன் நீதிபதி இருக்கையில் அமர்ந்த சம்பவம் அங்கு சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிங்கங்கை மாவட்டத்தில் உள்ள ஒருங்கிணைந்த குற்றவியல் நீதிமன்றத்திற்கு முனியசாமி என்பவர் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2016-ஆம் ஆண்டு வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்ட இவர் ஜாமீன் பெற்றார். இருப்பினும் அவர் மீது சில வழக்குகள் உள்ள நிலையில் நீதிமன்றத்தில் ஆஜர் ஆகாததால், அவர் மீது பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.

இதன்பேரில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இவர், வாரவாரம் அங்கிருக்கும் குற்றவியல் நீதிமன்றத்திற்கு வந்து கையெழுத்திட வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதன் காரணமாக நீதிமன்றம் வந்த போது, ழக்காடும் இடத்தில் யாரும் இல்லாததால் நீதிமன்றத்தில் அமைந்துள்ள விநாயகர் கோயிலில் இருந்த அரிவாளை எடுத்து வந்து நீதிபதி இருக்கையில் கருப்பசாமி மாதிரி அமர்ந்துள்ளார்.

இதைக் கண்ட அங்கிருந்த வழக்கறிஞர்கள் பதறிப் போய் பொலிசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அந்த நபர் உடனடியாக கைது செய்யப்பட்டார்.

மேலும் கைது செய்யப்பட்ட முனியசாமி மனநிலை பாதிக்கப்பட்டவர் என்றும் கூறப்படுகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers