தகாத உறவை நியாயப்படுத்திய காதல் கணவர்: அதிர்ச்சி முடிவெடுத்த மனைவி

Report Print Arbin Arbin in இந்தியா

தமிழகத்தில், தகாத உறவு கிரிமினல் குற்றமல்ல என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டி கணவன் நியாயப்படுத்தியதில் மனமுடைந்து மனைவி தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை எம்.ஜி.ஆர் நகரில் குடியிருக்கும் 24 வயது புஸ்பலதா என்பவரே கணவர் ஜான் பாலுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தின் முடிவில் தற்கொலை செய்துகொண்டவர்.

திருமணமல்லாத பாலியல் உறவு கிரிமினல் குற்றமல்ல என சில தினங்களுக்கு முன்பு இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது.

ஆனால் தற்கொலைக்கு தூண்டிய குற்றத்திற்காக கணவருக்கு எதிராக வழக்குப் பதியலாம் என உச்ச நீதிமன்றம் அந்த தீர்ப்பில் சுட்டிக்காட்டியிருந்தது.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் குடும்பத்தாரின் எதிர்ப்பை அடுத்து ஜான் பால் மற்றும் புஸ்பலதா ஆகிய இருவரும் காதல் திருமணம் செய்துகொண்டுள்ளனர்.

இந்த நிலையில் புஸ்பலதாவுக்கு டி.பி நோய் பிடிபட்டுள்ளது. அதற்கான சிகிச்சையும் அவர் மேற்கொண்டு வருகிறார்.

தமக்கு நோய் இருப்பதாக அறியவந்த நாள் முதல் தமது கணவர் தம்மிடம் நெருக்கமாக பழகுவதில்லை என தமது தோழிகளிடம் புஸ்பலதா புகார் தெரிவித்தும் வந்துள்ளார்.

இதனிடையே ஜான் பாலுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக புஸ்பலதா தெரிவ்ந்து கொண்டுள்ளார்.

இதனையடுத்து இரவு காலதாமதமாக வந்த கணவரிடம் வாக்குவாதத்தில் ஏற்பட்ட புஸ்பலதா, இதே நடவடிக்கை நீடித்தால் பொலிசாரிடம் புகார் அளிக்க இருப்பதாகவும் மிரட்டியுள்ளார்.

ஆனால் தகாத உறுவு குறித்து உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு தமக்கு சாதகமாக இருப்பதாகவும், தம்மை ஒன்றும் செய்துவிட முடியாது எனவும் ஜான் பால் தெரிவித்துள்ளார்.

கணவரிடம் இருந்து இந்த பதிலை எதிர்பார்க்காத புஸ்பலதா மனமுடைந்து சனியன்று இரவு குடியிருப்பில் எவரும் இல்லாத நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பில் பொலிசார் வழக்குப் பதிந்து விசாரணை ம்றேகொண்டு வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers