பாலியல் தொல்லை கொடுத்த உயரதிகாரி: தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட பெண் பொலிஸ்

Report Print Kabilan in இந்தியா

இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உயரதிகாரியின் பாலியல் துன்புறுத்தல் காரணமாக, பெண் பொலிஸ் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்திர பிரதேச மாநிலம் பாரபங்கி மாவட்டத்தில் 25 வயது பெண் அதிகாரி ஒருவர் பணியாற்றி வந்தார். இவரது உயரதிகாரி பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், குறித்த பெண் அதிகாரி தனது உயரதிகாரி பாலியல் துன்புறுத்தல் செய்ததாகவும், அதனால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்துகொள்வதாகவும் கடிதம் ஒன்றில் எழுதி வைத்துவிட்டு, தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்நிலையில், அவரது உடலை கைப்பற்றிய பொலிசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...