இப்படியொரு உயர் அதிகாரியா? சடலத்தை தோளில் சுமந்து சென்ற நெகிழ்ச்சி சம்பவம்

Report Print Raju Raju in இந்தியா

தமிழ்நாட்டில் மாரடைப்பால் உயிரிழந்த காவல் ஆய்வாளரின் உடலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பண்டி கங்காதர் தோளில் சுமந்து சென்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தருமபுரியை சேர்ந்த கண்ணப்பன் என்பவர் காவல்துறை ஆய்வாளராக பணிபுரிந்த நிலையில் நேற்று திடீரென மாரடைப்பால் இறந்தார்.

இதனைத்தொடர்ந்து அவரின் உடலை புதைக்க உறவினர்கள் கொண்டு சென்றனர்.

அப்போது நடந்த இறுதி ஊர்வலத்தில் காவல் கண்காணிப்பாளர் பண்டி கங்காதர், கண்ணப்பணின் உடலை தனது தோளில் சுமந்து சென்றார்.

இதன்பின்னர் அரசு மரியாதையுடன் அவர் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

பண்டி கங்காதரின் செயல் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers