தமிழகத்தில் நடந்த கோர விபத்து: குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் பலி!

Report Print Kabilan in இந்தியா

தமிழகத்தில் நடந்த கோர விபத்தில், புது வீட்டைப் பார்க்க சென்ற குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மேடவாக்கத்தைச் சேர்ந்த சுப்ரமணி என்பவர், திருச்சி பெட்டவாய்த்தலை அருகேயுள்ள சக்தி நகரில் 3 மாதங்களுக்கு முன்பு புதிதாக வீடு வாங்கியுள்ளார். அங்கு தனது குடும்பத்தினருடன் சென்று விடுமுறையை கழிப்பதை சுப்ரமணி வழக்கமாக கொண்டிருந்தார்.

இந்நிலையில், சுப்ரமணி தனது மனைவி ஜெயலட்சுமி, மகன்கள் விஜயராகவன், பாலமுருகன், மருமகன் மஞ்சுநாதன், அவரது மனைவி மற்றும் குழந்தைகள் என 13 பேருடன் காரில் திருச்சிக்கு புறப்பட்டுள்ளார்.

கார் திருச்சி சமயபுரம் சுங்கச்சாவடி அருகே சென்றபோது, அங்கு நின்றிருந்த லொறி மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் 2 குழந்தைகள், 3 பெண்கள் என 8 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். நான்கு பேர் படுகாயமடைந்தனர்.

இதனைத் தொடர்ந்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் இந்த விபத்தில் பலியானவர்கள் சுப்ரமணி, ஜெயலட்சுமி, விஜயராகவன், அவரது மனைவி கோமதி, பாலமுருகன், அவரது 11 வயது மகன் கந்தசாமி, மஞ்சுநாதன், அவரது மகள் வசந்தலட்சுமி(10) என்பது தெரிய வந்துள்ளது.

மேலும், படுகாயமடைந்த கவிதா, மஞ்சுநாதனின் மனைவி பாக்கியலட்சுமி, அவர்களது குழந்தை ரம்யா(5), விஜயராகவனின் குழந்தைகள் கந்தலட்சுமி, ஜெயஸ்ரீ ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers