தாயை ஆபாசமாக திட்டியதால் இவ்வாறு செய்தேன்: கொலையாளியின் அதிர்ச்சி வாக்குமூலம்

Report Print Santhan in இந்தியா

தன்னுடைய தாயை ஆபாசமாக திட்டியதால், வாலிபரை கொலை செய்தேன் என கொலையாளி பொலிசாரிடம் கூறியிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டம் மலவள்ளி தாலுகா சிக்கபாகிலு கிராமத்தை சேர்ந்தவர் கிரீஷ் (35). அதேப்பகுதியை சேர்ந்தவர் பசுபதி(28).

இவர்கள் இரண்டு பேரும் நண்பர்கள் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் கிரீஷிசுக்கும், பசுபதியின் தாய்க்கும் இடையே திடீரென்று தகராறு ஏற்பட்டுள்ளது.

வீடியோவைக் காண இங்கே க்ளிக் செய்யவும்....

அப்போது கிரீஷ் பசுபதியின் தாயை அவதூறாக பேசியதோடு மட்டுமின்றி, ஆபாசமாகவும் திட்டியுள்ளார். இதனால் பசுபதி இது குறித்து அவரிடம் கேட்ட போது, இருவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று காலை சிக்கபாகிலு பகுதியில் உள்ள விவசாய தோட்டத்தில் கிரீஷ் நின்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு சென்ற பசுபதி, கிரீசிடம் தனது தாயை ஆபாசமாக திட்டியது பற்றி கேட்டு உள்ளார்.

இதுதொடர்பாக அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறு முற்றி கைகலப்பாக மாறியதாக தெரிகிறது. அப்போது ஆத்திரம் அடைந்த பசுபதி அருகில் கிடந்த கோடரியால் கிரீசை வெட்டி உள்ளார். இதில் ரத்தவெள்ளத்தில் கிரீஷ் சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்து பரிதாபமாக இறந்து உள்ளார்.

ஆனாலும் ஆத்திரம் தீராத பசுபதி, கிரீசின் தலையை கோடரியால் வெட்டி அதன் பின் துண்டித்த தலையை கையில் எடுத்து கொண்டு ரத்தம் சொட்ட சொட்ட அங்கிருந்த காவல்நிலையத்திற்கு பசுபதி சென்றார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பொலிசார் அவரை உடனடியாக கைது செய்தனர்.

அதன் பின் அவரிடம் விசாரணை மேற்கொண்ட போது, எனது தாயை ஆபாசமாக திட்டிய கிரீசை ஒன்றும் செய்யாமல் விட்டுவிட்டால், நான் வாழ்வதற்கே தகுதியில்லை. அதனால் தான் அவரை கோடரியால் வெட்டி கொலை செய்தேன் என்று கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்