மாணவர்களின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட பேராசிரியர்: வெளியான அதிர்ச்சி வீடியோ

Report Print Kabilan in இந்தியா

இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் மாணவர்களின் காலில் விழுந்து பேராசிரியர் ஒருவர் மன்னிப்பு கேட்கும் வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலம் மன்சாவுர் மாவட்டத்தில் உள்ள கல்லூரி ஒன்றில், தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படுவதில் தாமதம் ஏற்பட்டதை கண்டித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏ.பி.வி.பி மாணவர்கள் கல்லூரி நிர்வாகத்திற்கு எதிராக வகுப்பறைக்கு வெளியில் கோஷங்களை எழுப்பி கூச்சலிட்டனர். அப்போது வகுப்பில் பாடம் நடத்திக்கொண்டிருந்த பேராசிரியர் தினேஷ் குப்தா என்பவர், மாணவர்களை அமைதியாக கலைந்து செல்லுமாறு கூறினார்.

இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள், பேராசிரியர் மீது பொலிசில் புகார் அளிக்கப்போவதாக மிரட்டினர். அத்துடன் புகார் தெரிவிக்காமல் இருக்க வேண்டுமானால், பேராசிரியர் தங்களது காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என தெரிவித்ததாக கூறப்படுகிறது.

அவர்களின் மிரட்டலுக்கு பணிந்த தினேஷ் குப்தா, மாணவர்களின் காலை தொட்டு மன்னிப்பு கேட்டார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மாணவர்களின் இந்த செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...