திருமணமான 6 மாதத்தில் தூக்கில் தொங்கிய புதுமாப்பிள்ளை: மனைவியின் செயலால் விபரீதம்

Report Print Raju Raju in இந்தியா

இந்தியாவில் திருமணமான 6 மாதத்தில் புதுமாப்பிள்ளை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலத்தின் லூதியானாவை சேர்ந்தவர் தேஸ் ராஜ். இவருக்கு கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் வேறு நகருக்கு மனைவியுடன் குடியேற முடிவு செய்த ராஜ் இது குறித்து அவரிடம் பேசினார்.

ஆனால் தன்னால் வேறு நகருக்கு வரமுடியாது என மனைவி திட்டவட்டமாக கூறிவிட்டார்.

இதனால் விரக்தியில் இருந்த ராஜ் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்த ராஜின் உறவினர் நிரஞ்சன்குமார் பொலிசுக்கு தகவல் கொடுத்த நிலையில் சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் ராஜின் சடலத்தை கைப்பற்றிவிட்டு இது குறித்து விசாரித்து வருகிறார்கள்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers