காதல் கணவரை கழுத்தை அறுத்து கொலை செய்த வழக்கு: காதலனுடன் பொலிசில் சிக்கிய மனைவி

Report Print Arbin Arbin in இந்தியா

இந்தியாவின் கேரள மாநிலத்தில் காதல் கணவரை கழுத்தை அறுத்து கொலை செய்த மனைவி மற்றும் அவரது காதலனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கேரளாவின் கடுங்கலூர் பகுதியில் குடியிருக்கும் கிரிஷ் மற்றும் சீமா ஆகிய இருவரையுமே ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2012 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 12 ஆம் திகதி மோகன்தாஸ் என்பவர் கொடூரமான முறையில் கழுத்தறுபட்டு கொல்லப்பட்டார்.

எர்ணாகுளம் பகுதியில் அருகாமையில் அமைந்திருந்த இரண்டு நிறுவனங்களில் வேலை பார்த்து வந்தவர்கள் கிரிஷ் மற்றும் சீமா.

இந்த நிலையில் இருவருக்கும் நெருக்கம் ஏற்படவே, இருவரும் திட்டமிட்டு சீமாவின் கணவரான மோகன் தாசை கொலை செய்ய முடிவு செய்துள்ளனர்.

சம்பவத்தன்று இரவு பணிக்கு செல்லவிருந்த மோகன் தாசிடம் தமது நண்பர் கிரிஷுக்கு உடல் நலம் சரியில்லை எனவும், அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டும் எனவும் கோரியுள்ளார்.

இதனையடுத்து மருத்துவமனை செல்லும் வழியில் மோகன் தாசை தாக்கி பின்னர் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார் கிரிஷ்.

பின்னர் அங்கிருந்த புதருக்குள் சடலத்தை மறைவு செய்துவிட்டு கிரிஷ் அங்கிருந்து தப்பியுள்ளார். சாலை விபத்து என கருதிய பொலிசார்,

அதன் பின்னர் மேற்கொண்ட தீவிர விசாரணைக்கு பின்னர் இது திட்டமிட்ட கொலை என தெரியவந்தது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers