இளைஞரின் தலையை துண்டாக வெட்டி காவல்நிலையத்திற்கு எடுத்து வந்த மகன்! வெளியான திடுக்கிடும் காரணம்

Report Print Santhan in இந்தியா

இந்தியாவில் தாயை தொந்தரவு செய்த நபரின் தலையை மகன் துண்டாக வெட்டி கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் உள்ள மலவள்ளி கிராமத்தில் இளைஞர் ஒருவர் அந்த கிராமத்தில் இருக்கும் பெண்ணை தொடர்ந்து தொந்தரவு செய்து வந்துள்ளார்.

இந்த தகவல் அவரின் மகனுக்கு தெரியவர உடனடியாக ஆத்திரமடைந்த அவர், குறித்த இளைஞனின் தலையை துண்டாக வெட்டி கொலை செய்துவிட்டு, அதன் பின் அவரின் தலையை கையில் எடுத்துக் கொண்டு காவல்நிலையத்தில் வந்து சரண் அடைந்துள்ளார்.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொலிசார் அந்த நபரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொலை செய்யப்பட்டவர் யார் என்று தெரியாததால், அந்த நபர் குறித்து அடையாளம் காணும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

தொந்தரவு கொடுத்த இளைஞரின் தலையை வெட்டி கையில் எடுத்து வந்த சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers