சென்னையில் பொலிசார் துப்பாக்கி சூடு நடத்தியதால் பரபரப்பு... அதிரவைக்கும் காரணம்

Report Print Raju Raju in இந்தியா

கேரள பொலிசார் சென்னை விருகம்பாக்கத்தில் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

விருகம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் மஹாராஜா. இவர் கேரளத்தில் நிதி நிறுவனம் நடத்தி வந்தார். இந்நிலையில் அங்கு மோசடி செய்துவிட்டு மீண்டும் சென்னைக்கே தப்பி வந்துவிட்டார்.

இதையடுத்து அவர் மீது அங்குள்ள மக்கள் புகார் அளித்ததையடுத்து கேரள பொலிசார் வழக்கு பதிவு செய்து மஹாராஜாவை தேடி வந்தனர். இந்நிலையில் அவர் விருகம்பாக்கத்தில் இருப்பதை அறிந்து அவரை கைது செய்ய வந்தனர். அப்போது அவரது உறவினர்கள் கைது செய்யக் கூடாது என்று தடுத்தனர்.

மஹாராஜா நிதி மோசடி செய்தது குறித்து பொலிசார் உறவினர்களிடம் எடுத்துக் கூறியும் அவர்கள் ஒத்துழைக்கவில்லை.

இதனால் கேரள பொலிசார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து மஹாராஜாவை கைது செய்து அழைத்து சென்றனர்.

வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியது குறித்து விருகம்பாக்கம் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers