இறந்த யானைக்குட்டியை வைத்து தாய் யானை செய்த செயல்: கண்ணீர் வரவழைக்கும் புகைப்படம்

Report Print Raju Raju in இந்தியா

கர்நாடக மாநிலத்தில் இறந்த குட்டி யானையை அப்புறப்படுத்த விடாமல் இரண்டு நாட்கள் பாசப்போராட்டம் நடத்திய தாய் யானையின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹாசன் மாவட்ட வனப்பகுதியை ஒட்டியுள்ள கொத்தனூர் கிராமத்துக்கு, யானை உள்ளிட்ட வனவிலங்குகள் உணவுக்காக வந்து செல்வது வழக்கம். அவ்வாறு வந்த யானைக்கூட்டத்தில் இருந்த பெண் யானை ஒன்று குட்டி ஈன்ற நிலையில், குட்டி உயிரிழந்ததால் தாய் யானை அங்கேயே சுற்றி சுற்றி வந்தது.

குட்டி யானையின் உடலை மீட்க வனத்துறையினர் பட்டாசு வெடித்து தாய் யானையை விரட்ட முயன்றனர்.

கடந்த 2 தினங்களாக தாய் யானை பாசப்போராட்டம் நடத்தி வந்தது. இன்று குட்டி யானையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனை செய்து அங்கேயே புதைத்தனர்.

குட்டியானையின் சடலத்தை தாய் யானை பாதுகாக்கும் புகைப்படம் கண்ணீர் வரவழைக்கும் விதத்தில் அமைந்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers