வீட்டில் திடீரென்று வெடித்து சிதறிய பிரிட்ஜ்! குழந்தை உட்பட 4 பேர் பரிதாபமாக இறந்தனர்

Report Print Santhan in இந்தியா

இந்தியாவில் பிரிட்ஜ் வெடித்து சிதறியதால் குழந்தை உட்பட நான்கு பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.

மத்தியப்பிரதேச மாநிலம் குவாலியரில் உள்ள தர்பன் காலனிப் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருந்த குளிர்சாதனப் பெட்டியின் கம்ப்ரசர் திடீரென்று எதிர்பாராமல் வெடித்தால், வீட்டின் சுவர் பகுதி இடிந்து விழுந்துள்ளது.

இதனால் விபத்தில் சிக்கி இரண்டு குழந்தைகள் உட்பட நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

மேலும், வீட்டின் உள்ளே 9 பேர் இருந்ததாகவும், அவர்களின் நிலை என்ன என்பது குறித்து எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை.

பெரிய சத்தத்துடன் விபத்து ஏற்பட்டதையடுத்து, அருகில் குடியிருந்தவர்கள், பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். விரைந்து வந்த பொலிசார் விபத்தில் இறந்தவரகளின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவருபவர்களிடம் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers