என் வளர்ப்பு அப்படி! லட்சுமி ராமகிருஷ்ணன் பதிலடி

Report Print Raju Raju in இந்தியா

டுவிட்டரில் நபர் ஒருவர் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணனை ஒருமையில் பேசியதற்கு அவர் பதிலடி கொடுத்துள்ளார்.

சமூகத்தில் நடக்கும் பல விடயங்கள் குறித்து தைரியமாக கருத்துக்கள் சொல்வதை லட்சுமி ராமகிருஷ்ணன் வழக்கமாக கொண்டுள்ளார்.

இது சம்மந்தமாக தனது டுவிட்டர் பக்கத்தில் டுவிட் செய்தும் வருகிறார்.

இந்நிலையில் உச்சநீதிமன்றம் திருமணத்துக்கு பிறகான தகாத உறவு குற்றமில்லை என தீர்ப்பு வழங்கியது.

இது குறித்து நபர் ஒருவர் டுவிட்டரில், லட்சுமி ராமகிருஷ்ணாவிடம், எல்லாவற்றுக்கும் கருத்து சொல்லும் நீங்கள் இதை ஏன் எதிர்க்கவில்லை என ஒருமையில் டுவிட் செய்தார்.

அதற்கு பதிலளித்த லட்சுமி ராமகிருஷ்ணன், முதலில் என் டுவீட்ஸ் படிங்க, நான் அநாகரீகமான வார்த்தைகளை பயன்படுத்துவதில்லை, மற்றவர்களுக்கு மரியாதை கொடுப்பேன்.

அதனால் தான் இப்படி உங்களிடம் பேசுகிறேன், என் வளர்ப்பு என பதிவிட்டுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்