இறந்து 3 நாள் ஆச்சு! ரமணா திரைப்பட பாணியில் சடலத்துக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள்

Report Print Raju Raju in இந்தியா

தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு முன்னர் இறந்தவருக்கு ரமணா திரைப்பட பாணியில் தனியார் மருத்துவமனை சிகிச்சையளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாகை மாவட்டம் திருக்குவளையை சேர்ந்த சேகர் என்பவருக்கு வயிற்றுவலி ஏற்பட்ட நிலையில், அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இதைத் தொடர்ந்து கடந்த சேகரை மேல்சிகிச்சைக்காக தஞ்சையில் உள்ள வேறு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த மருத்துவமனையில் சிகிச்சைக்க ரூ.5½ லட்சம் வரை செலவானது.

மேலும் மருத்துவமனை நிர்வாகம் ரூ.2½ லட்சம் பாக்கி உள்ளது என்றும், அந்த தொகையை உடனடியாக கட்ட வேண்டும் என்றும் வற்புறுத்தியது.

இதையடுத்து தங்களிடம் இருந்த ரூ.50 ஆயிரம் ரூபாயை அவரது உறவினர்கள் கட்டியுள்ளனர். தொடர்ந்து சிகிச்சை அளிக்க பணம் இல்லாதால் நேற்று மதியம் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேகர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சேகர் இறந்து 3 நாட்களாகி விட்டது என்று தெரிவித்தனர்.

இதை கேட்டு அவருடைய குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இறந்தவரை உயிருடன் இருப்பதாக கூறி பணம் வசூலித்து அந்த தனியார் மருத்துவமனை தங்களை ஏமாற்றி விட்டதே என வேதனை அடைந்தனர்.

இதுகுறித்து அந்த தனியார் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சேகரின் மகன் சுபாஷ், பொலிசில் புகார் அளித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers