காதலனுடன் நள்ளிரவில் சண்டையிட்டு சென்ற இளம்பெண்: பின்னர் நேர்ந்த கொடூரம்

Report Print Kabilan in இந்தியா

தமிழகத்தின் சேலம் மாவட்டத்தில் காதலனை விரட்டியடித்து விட்டு, ஆட்டோ ஓட்டுநர்கள் இருவர் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் பெருந்துறையைச் சேர்ந்த வாசுதேவன் என்பவர், தருமபுரியைச் சேர்ந்த பெண்ணொருவரை காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் வெளியில் செல்ல முடிவெடுத்து சேலம் மாவட்டம் ஏற்காட்டிற்கு இரு தினங்களுக்கு முன்பு வந்துள்ளனர்.

அங்கு இருவரும் தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளனர். இந்நிலையில், நள்ளிரவில் காதலர்களுக்குள் சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் இளம்பெண் கோபமடைந்து அறையை விட்டு வெளியேறி விட்டார்.

பின்னர், அண்ணாபூங்கா அருகே வந்த அவரிடம் ஆட்டோ ஓட்டுநர்களான ஆரோக்கியதாஸ், விஜயகுமார் என்ற இருவர் இரவுவேளையில் வெளியே வந்தது குறித்து விசாரித்துள்ளனர். அப்போது, அப்பெண் நடந்த விடயங்களை கூறியுள்ளார்.

அச்சமயம் அங்கு வந்த பெண்ணின் காதலரான வாசுதேவன், ஆட்டோ ஓட்டுநர்களிடம் தனது காதலி இருப்பதைக் கண்டு தகராறு செய்துள்ளார். அதன் பின்னர் விஜயகுமார், ஆரோக்கியதாஸ் இருவரும் சேர்ந்து வாசுதேவனை தாக்கிவிட்டு, அவரிடம் இருந்து மோதிரம் பணத்தைப் பறித்துக்கொண்டு அவரை விரட்டியடித்துள்ளனர்.

அத்துடன் குறித்த பெண்ணை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு சென்றுள்ளனர். ஆரோக்கியதாஸ் பாதியில் இறங்கிவிட, விஜயகுமார் இளம்பெண்ணை வேறு ஒரு விடுதியில் அறையெடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், வாசுதேவன் ஏற்காடு காவல் நிலையத்தில் புகார் தெரிவித்ததின் பேரில் விஜயகுமார், ஆரோக்கியதாஸ் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers