திருமணமான 6 நாளிலேயே தொடங்கிய கொடுமை: தூக்கில் தொங்கிய இளம்பெண்

Report Print Raju Raju in இந்தியா

இந்தியாவின் கொல்கத்தாவில் திருமணமான சில மாதத்தில் பெண்ணொருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நந்தினி (23) என்ற பெண்ணுக்கும் சஞ்சீப் என்பவருக்கும் சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது.

இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் நந்தினி வீட்டில் தூக்கில் சடலமாக தொங்கியுள்ளார்.

நந்தினி தற்கொலை செய்து கொண்டதாக தாங்கள் நம்புவதாகவும், பிரேத பரிசோதனைக்கு பின்னரே அதை உறுதிப்படுத்தமுடியும் எனவும் பொலிசார் கூறியுள்ளனர்.

அதே சமயம் நந்தினியை அவர் கணவரும், குடும்பத்தாரும் சேர்ந்து கொன்றுவிட்டதாக அவரின் குடும்பத்தார் புகார் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து பொலிசார் கூறுகையில், தற்போது நந்தினியின் கணவர் சஞ்சீப் மற்றும் மாமனார், மாமியார் தலைமறைவாக உள்ளனர்.

நந்தினி குடும்பத்தார் கூற்றுப்படி, திருமணமான எட்டாவது நாளே பத்து லட்சம் பணம் மற்றும் கார் கேட்டு அவரை, கணவர் கொடுமைப்படுத்த தொடங்கியுள்ளார்.

இதையடுத்து 3 லட்சம் பணம் அவருக்கு கொடுக்கப்பட்டது, ஆனாலும் கொடுமை தொடர்ந்துள்ளது.

இதனிடையில் சஞ்சீப்புக்கு அவர் மைத்துனியுடன் தொடர்பு ஏற்பட்டதாகவும் நந்தினி குடும்பத்தார் கூறியுள்ளனர்.

மேலும், விவாகரத்து கேட்டு நந்தினியை சஞ்சீப் மிரட்டியுள்ளார். இதனால் மனவேதனையில் நந்தினி இருந்துள்ளார்.

சஞ்சீப் மற்றும் அவர் குடும்பத்தார் சிக்கிய பின்னரே முழு உண்மை வெளிவரும் என கூறியுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers