என் கதி யாருக்கும் ஏற்படக்கூடாது: திருநங்கை வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டத்தில் கணவரின் கல்லறை முன்பு விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற திருநங்கையின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருநங்கை ஜீவா-வின் கணவர் ஸ்டீபன் ராஜ் கொலை செய்யப்பட்டுள்ளதாக அவர் அளித்த புகார் மீது பொலிஸ் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதில் மனவேதனை அடைந்த ஜீவா, நேற்று கணவரின் கல்லறை முன்பு விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற காட்சி சமூக வளைதளங்களில் பரவியது.

அதில், என்னுடன் இருந்ததால் கணவரை கொன்றுவிட்டார்கள், என் நிலை வேறு யாருக்கும் வரக்கூடாது என ஜீவா கூறியுள்ளார்.

இதனிடையே மயங்கிய நிலையில் சமாதி அருகே கிடந்த ஜீவாவை உறவினர்கள் மீட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...