சுந்தரத்தை நேரில் பார்த்த அபிராமி! என்ன செய்தார் தெரியுமா?

Report Print Fathima Fathima in இந்தியா

குன்றத்தூர் அபிராமி விவகாரம் நாம் அனைவரும் அறிந்ததே, கள்ளக்காதலன் சுந்தரத்துக்காக பெற்ற பிள்ளைகளை கொன்ற கொடூர தாய்.

தற்போது இருவரும் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் நேற்று வழக்கு விசாரணைக்காக இருவரையும் ஒரே வாகனத்தில் அழைத்து வந்த பொலிசார், ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் சிவசுப்பிரமணியம் முன் ஆஜர்படுத்தினர்.

விசாரணைக்கு பின்னர், இருவரின் நீதிமன்ற காவலையும் 12ம் திகதி வரை நீட்டித்து மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.

இதன்பின்னர் மீண்டும் ஒரே வேனில் அழைத்து செல்லப்பட்டனர், வேனில் ஏறிய போது ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

அப்போது அபிராமி சுந்தரத்தை பார்த்து கண்ணீர்விட்டு அழுதார், சுந்தரம் இறுகிய முகத்துடன் காணப்பட்டாராம்.

அபிராமியை பார்க்க அவரது உறவினர்கள் வராத நிலையில், சுந்தரத்தின் மனைவி மட்டும் வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...