4 ஆண்டுகளாக காதல்! கணவன் செய்த துரோகம்... இளம் மனைவிக்கு நேர்ந்த அவலம்

Report Print Raju Raju in இந்தியா

இந்தியாவின் மேற்குவங்கத்தில் கணவருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பதாகவும், அவர் வேறு பெண்ணை சமீபத்தில் திருமணம் செய்துகொண்டாகவும் கூறிய மனைவி போராட்டத்தில் ஈடுபட்டார்.

தீபக்குமார் என்ற நபரும் சுலகா என்ற பெண்ணும் நான்கு ஆண்டுகளாக காதலித்த நிலையில் கடந்த 2011-ல் திருமணம் செய்து கொண்டனர். தம்பதிக்கு 3 வயதில் குழந்தை உள்ளது.

இந்நிலையில் தீபக் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறி தனது மாமியார் காயத்ரியுடன் சேர்ந்து சாலையில் உட்கார்ந்து சுலகா தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

சுலகா கூறுகையில், திருமணத்துக்கு பின்னர் தீபக்குக்கு பல பெண்களுடன் தொடர்பு ஏற்பட்டது.

அவர் பல நாட்கள் வீட்டுக்கே வரமாட்டார், நான் இதை கண்டித்தும் என் பேச்சை கேட்கவில்லை. மேலும், எனக்கு தெரியாமல் வேறு பெண்ணை அவர் திருமணம் செய்து கொண்டுள்ளதாக கூறியுள்ளார்.

இதையடுத்து அங்கு வந்த பொலிசார் இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக கூறி சுலகாவை சமாதானப்படுத்தினார்கள்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers