சுட்டுக்கொல்லப்பட்ட தமிழர்: உடலை தோளில் சுமந்து சென்ற அவலம்

Report Print Kabilan in இந்தியா

இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழரின் உடலை, அவரது உறவினர்கள் 5 கிலோ மீற்றர் சுமந்து சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் கானமலையைச் சேர்ந்தவர் காமராஜ். இவர் கடந்த 31ஆம் திகதி ஆந்திராவில் செம்மரம் கடத்தியதாக சுட்டுக்கொல்லப்பட்டார்.

அதன் பின்னர் காமராஜின் உறவினர்கள் அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், மறுஉடற்கூறாய்வு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

அதனைத் தொடர்ந்து, காமராஜின் உடல் மறுஉடற்கூறாய்வு செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர், ஆந்திராவில் இருந்து அவரது உடல் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு கொண்டுவரப்பட்டது.

ஆனால், சொந்த ஊரான கானமலைக்கு காமராஜின் உடலை கொண்டு செல்ல சாலை வசதியில்லை. இதன் காரணமாக, அவரது உடலை கம்பில் கட்டி 5 கிலோ மீற்றர் தூரம் உறவினர்கள் தூக்கிச் சென்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்