உண்மையை சொல்லிவிடுகிறேன்!... என் அனுமதியில்லாமல் வீட்டுக்குள்.. நடிகை நிலானி கண்ணீர்

Report Print Vijay Amburore in இந்தியா

சின்னத்திரை நடிகை நிலானியின் காதலன் காந்தி என்கிற லலித்குமார் தற்கொலை செய்துகொண்ட விவகாரம் தொடர்பாக சில தகவல்களை வெளியிட்டுள்ளார்.

உதவி இயக்குநர் காந்தி என்கிற லலித்குமார் கடந்த சில நாட்களுக்கு முன்பு தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட விவகாரமானது தற்போது பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இந்த விவகாரத்தில் நடிகை நிலானி தலைமறைவாகிவிட்டார் என கூறப்பட்ட நிலையில், இன்று காலை சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நுண்ணறிவு பிரிவு துணை கமிஷனர் விமலாவைச் சந்தித்து புகார் அளித்தார்.

இந்த நிலையில் நடந்த சம்பவம் குறித்து கண்ணீர் மல்க தெரிவித்துள்ள நிலானி, கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தான் எனக்கு லலித்குமார் அறிமுகம் கிடைத்தது. என்னுடைய கணவர் பிரிந்து சென்றதும், கிடைக்கின்ற வருமானத்தை வைத்து குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறேன்.

லலித் என்னிடம் அன்பாக பழகக்கூடியவர். எனக்கு நிறைய உதவிகள் செய்துள்ளார். ஒருமுறை அவர் என்னிடம் காதலை கூறினார். ஆனால் நான் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை.

தொடர்ந்து என்னை வற்புறுத்தினார். அதனால் அதற்கு நான் ஒப்புக்கொண்டேன். இரண்டு வருடங்களுக்கு பிறகு திருமணம் செய்துகொள்ளலாம் என கூறினேன். லலித்குமாரும் அதற்கு ஒப்புக்கொண்டார்.

ஆனால் அதன்பிறகு தான் அவரை பற்றிய ரகசியங்கள் எனக்கு தெரியவந்தது. லலித்குமாரிடம் ஜாக்கிரதையாக இருக்குமாறு அவருடைய சகோதரர், சகோதரியே கூறினார்கள்.

இதனால் நான் அவரிடம் இருந்து விலகி இருக்க ஆரம்பித்தேன். அதன் பின்னர் அவர் என்னை பல வழிகளில் டார்ச்சர் செய்ய ஆரம்பித்தார். ஒருமுறை டிசம்பர் மாதம் அவர் என்னை கடுமையாக தாக்கியதில் மயங்கி விழுந்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன்.

இதுதொடர்பாக அவர் மீது வழக்கு தொடுத்துவிட்டு பின்னர், குடும்பத்திற்காக அதனை வாபஸ் பெற்றேன். இதனையடுத்து லலித் என்னை தொந்தரவு செய்யவில்லை. இதனால் நான் நிம்மதியாக இருந்த வேளையில் தான், தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்மந்தமாக நான் கைது செய்யப்பட்டேன். என்னை வெளியில் எடுக்க லலித்குமார் உதவி செய்தார்.

அதன்பிறகு அவருடைய ஆட்டம் மீண்டும் ஆரம்பமானது. அடிக்கடி என்னுடைய வீட்டிற்கு வர ஆரம்பித்தார். என்னுடைய குழந்தைகளை அடிக்க ஆரம்பித்தவர், அவர்களை வைத்தே என்னை மிரட்டவும் ஆர்ம்பித்தார். இந்தச் சமயத்தில் தான் கடந்த 10 நாளுக்கு முன், ஒரு நாள் மட்டும் நீ என் விருப்பப்படி நடந்துக்கொள். நான் செய்யும் எந்தச் செயலுக்கும் நீ மறுப்பு தெரிவிக்கக் கூடாது என லலித்குமார் என்னிடம் வேண்டுகோள் விடுத்தார்.

குழந்தைகளுக்காக நானும் அதற்கு சம்மதம் தெரிவித்தேன். பேருந்தில் தென் மாவட்டத்திற்கு செல்லும்போது தான் எனக்கு மெட்டி அணிவித்தார். அதனை வீடியோ எடுக்கும்போது கூட நான் மறுப்பு தெரிவித்தேன். ஆனால் அவர் என்னை சம்மதிக்க வைத்துவிட்டார். அந்த வீடியோக்கள் தான் தற்போது இணையத்தில் பரவி வருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு என்னுடைய அனுமதி இல்லாமல் வீட்டிற்குள் நுழைந்த லலித்குமார், என் பின்பக்கமாக நின்று தாலி கட்டினார். நான் அதனை அறுத்து எறிந்து விட்டேன். கடந்த மூன்று வருடங்களாக எனக்கு பல்வேறு துன்பங்களை கொடுத்துள்ளார் என கண்ணீர் மல்க வேதனை தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்