மாணவியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த மாணவர்கள்! பள்ளி நிர்வாகம் செய்த கொடூரம்

Report Print Kabilan in இந்தியா

இந்தியாவில் பத்தாம் வகுப்பு மாணவி ஒருவர், 4 மாணவர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கர்ப்பமானதைத் தொடர்ந்து, பள்ளி நிர்வாகம் அதனை கலைக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள பள்ளி மாணவி ஒருவர், விடுதியில் படித்து வந்துள்ளார். இவரை விடுதியில் தங்கி படிக்கும் 4 சீனியர் மாணவர்கள், கடந்த ஆகஸ்ட் மாதம் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த மாணவி உடல்நிலை சரியில்லை எனக் கூறி மருத்துவமனை சென்றபோது, அவர் கர்ப்பமாக இருப்பது தெரிய வந்துள்ளது.

அதனைத் தொடர்ந்து, பள்ளி நிர்வாகி தனது மனைவி மற்றும் விடுதி பாதுகாப்பாளருடன் இணைந்து, பாதிக்கப்பட்ட மாணவியின் கர்ப்பத்தை கலைக்க கட்டாயப்படுத்தி மாத்திரைகளை எடுத்துக்கொள்ள வலியுறுத்தியுள்ளார்.

அதன் பின்னர், குறித்த மாணவி தனக்கு நேர்ந்த கொடூரம் குறித்து தனது சகோதரியிடம் கூறியுள்ளார். பின்னர் சகோதரி இது குறித்து தங்களது பெற்றோருக்கு தகவல் அளித்ததைத் தொடர்ந்து, பொலிசில் புகார் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் பள்ளி நிர்வாகி, அவரது மனைவி, விடுதி காப்பாளர் மற்றும் 4 மாணவர்கள் உட்பட 9 பேரை கைது செய்த பொலிசார், விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்