தமிழ் முறைப்படி திருமணம் செய்துகொண்ட சீன ஜோடி

Report Print Vijay Amburore in இந்தியா

தஞ்சாவூரில் தமிழக முறைப்படி சீன ஜோடிகள் திருமணம் செய்துகொண்டுள்ள சம்பவம் அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூரில் நடைபெற்ற நண்பரின் திருமணத்திற்கு சீனாவை சேர்ந்த ஜோடியினர் வருகை தந்திருக்கின்றனர்.

அங்கு தமிழ் முறைப்படி நடைபெற்ற திருமணம் அவர்களுக்கு பிடித்து போகவே, உடனே பட்டு வேஷ்டி, சட்டை மாற்றி உடனடியாக திருமணம் செய்துகொண்டனர்.

சமீபகால தலைமுறையினர் தமிழ் பாரம்பரியத்தை விடுத்து வெளிநாட்டு முறைப்படி திருமணம் செய்துகொள்ளும் வேளையில், சீனாவை சேர்ந்த ஜோடியின் தமிழ்பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்துள்ள சம்பவம் அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்