காதலன் லலித்குமாரின் தற்கொலைக்கு நான் காரணமல்ல: நடிகை நிலானி பரபரப்பு விளக்கம்

Report Print Kabilan in இந்தியா

தனது காதலன் காந்தி என்கிற லலித்குமாரின் தற்கொலைக்கு தான் காரணம் அல்ல என நடிகை நிலானி தற்போது விளக்கமளித்துள்ளார்.

சின்னத்திரை நடிகை நிலானி மற்றும் சினிமாவில் உதவி இயக்குனராக பணிபுரிந்து வந்த லலித்குமார் இருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில், காந்தி தன்னை திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தியதாக நிலானி காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

இதனால் மனமுடைந்த லலித்குமார், தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், நிலானி மற்றும் லலித்குமார் இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின.

அதன் பின்னர் இதுதொடர்பாக விசாரணை செய்ய பொலிசார் நிலானியை தேடி சென்றபோது, அவர் தனது கைப்பேசியை அணைத்து வைத்துவிட்டு தலைமறைவாகி விட்டதாக கூறப்பட்டது.

இந்நிலையில், இன்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு சென்ற நிலானி, மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறுகையில்,

‘காதலன் காந்தி என்கிற லலித்குமாரின் தற்கொலைக்கு நான் காரணம் அல்ல. காதலன் காந்தியை திருமணம் செய்ய நினைத்திருக்கிறேன்.

குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி இருந்த காந்தி என்னிடம் நிறைய பணத்தை வாங்கியதால், அவரிடம் இருந்து ஒதுங்கியிருந்தேன். நானும், காந்தியும் சேர்ந்து இருந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேண்டும் என்றே பரப்பபடுகின்றன.

இதனால் சமூக வலைதளங்களில் என் புகைப்படங்களை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்