தமிழிசை பெரிய எலிசபெத் ராணியா? துரைமுருகன் கேள்வி

Report Print Kabilan in இந்தியா

பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பெரிய எலிசபெத் ராணியா என ஆட்டோ ஓட்டுநர் தாக்கப்பட்ட விவகாரம் குறித்து தி.மு.க பிரமுகர் துரைமுருகன் கருத்து தெரிவித்துள்ளார்.

கடந்த 16ஆம் திகதி சென்னை சைதாப்பேட்டையில் நடந்த விழா ஒன்றில், பா.ஜ.க தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்துகொண்டார். அப்போது அவரிடம் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் பெட்ரோல் விலையுயர்வு குறித்து கேள்வி கேட்டதாக கூறப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து, அவர் விரட்டப்பட்டு தாக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் செய்தி வெளியானதால் பரபரப்பானது. இந்நிலையில், அ.தி.மு.க அரசைக் கண்டித்து தி.மு.க சார்பில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க பொருளாளர் துரைமுருகன் கலந்துகொண்டார்.

அப்போது பத்திரிகையாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், ‘இது என்ன ஆச்சர்யம் என்று தெரியவில்லை. உலகத்தில் பெரிய எலிசபெத் ராணியா தமிழிசை? யாரும் எதையும் கேட்கக் கூடாது என்று கூறுவதற்கு.

இது ஜனநாயக நாடு. யாரும் எதையும் கேட்டுக்கொண்டு தான் இருப்பார். சீட்டு வந்துகொண்டே இருக்கும். பதில் கூற வேண்டும். எல்லாம் பொதுவுடைமை என்று கூறுகிறாயே என, பெரியாரை ஆத்திரமூட்டும் விதத்தில் ஒருவர் கேள்வி கேட்டார். அதற்கு தக்க பதில் கூறினார் பெரியார்.

ஆகையால் ஒருவர் கேள்வி கேட்பதே தவறு. அதற்கு பயந்துகொண்டு அவரை அடிப்பது, அவர் மீது வழக்குபோடுவது, சிறைக்குள் தள்ளுவது என்ன நடைமுறை என்று தெரியவில்லை. ஆகையால் தமிழிசை இன்னும் கொஞ்சம் வளர வேண்டும் அரசியலில்.

அவர் இன்னும் குழந்தையாகவே உள்ளார். சின்னக் குழந்தையில் இருந்து எனக்கு தமிழிசையைத் தெரியும். இன்னும் குழந்தையாகவே இருக்கிறார்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்