கவலைப்படாதே பிரனய் ... ஆணவக்கொலைக்கு கணவனை பறிகொடுத்த கர்ப்பிணியின் போராட்டம் தொடங்கியது

Report Print Deepthi Deepthi in இந்தியா

திருமணமான 6 மாதத்தில் ஆணவக்கொலைக்கு கணவரை பறிகொடுத்த 3 மாத கர்ப்பிணி அம்ருதா பேஸ்புக் பக்கத்தில் கணவருக்கு நீதி வேண்டி பிரசாரத்தை தொடங்கியுள்ளார்.

இந்தப் பக்கத்தை செவ்வாய்க்கிழமை காலை 10 மணி நிலவரப்படி 64 ஆயிரம் பேர் 'லைக்' செய்துள்ளனர்.

''கவலைப்படாதே பிரனய்.. நீ தனியாக இல்லை.. என்னுடன் சேர்ந்து கோடிக்கணக்கான மக்களின் இதயத்தில் இருக்கிறாய்.. நீதிக்காக ஏராளமான மக்கள் போராடி வருகின்றனர்'' என்று எழுதியிருந்தார்.

தெலங்கானா மட்டுமல்லாது இந்தியா, உலகம் முழுவதும் உள்ள பேஸ்புக் பயனாளிகள் இப்பக்கத்தைப் பின் தொடர்கின்றனர்.

ஏராளமானோர் பிரனய்க்கு ஆதரவாக மெழுகுவர்த்தி ஏந்தி வரும் புகைப்படங்களையும், ஆணவக் கொலைக்கு எதிரான பேரணி படங்களையும் பகிர்ந்து வருகின்றனர்.

முன்னதாக சாதியத்துக்கு எதிராகப் போராடத் தான் பல்வேறு விதமான மக்களைச் சந்திக்க உள்ளதாக அம்ருதா கூறியிருந்தார்.

ட்விட்டரில் #SayNoToCaste என்ற ஹேஷ்டேக் திங்கட்கிழமை மாலை 6 மணி வாக்கில் ட்ரெண்ட் ஆனது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்