மனைவியின் 16 வயது தங்கையின் குழந்தைக்கு அப்பாவாகிய வாலிபர்

Report Print Deepthi Deepthi in இந்தியா

தானே மாவட்டத்தில் மனைவியின் தங்கையை கடத்தி தாயாக்கிய கிரண் அகிரே என்ற வாலிபர் 2 ஆண்டுக்கு பின் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிரண் அகிரே (வயது26) என்பவர் கடந்த 2016-ம் ஆண்டு ஜூன் மாதம் தனது மனைவியின் 16 வயது தங்கையை கடத்திச்சென்றார்.

இந்நிலையில், சம்பவத்தன்று கிரண் அகிரே தானேயில் ஒரு பஸ் நிறுத்தத்தில் தனது மனைவியின் தங்கையுடன் நின்று கொண்டிருப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அங்கு சென்று பொலிசார் அந்த பெண்ணை மீட்டனர். அப்போது, அந்த பெண்ணின் கையில் பெண் குழந்தை ஒன்று இருந்தது.

விசாரணையில், மனைவியின் தங்கையை கடத்தி கற்பழித்தது தெரியவந்தது. இதன் காரணமாக அந்த பெண் கர்ப்பிணியாகி கடந்த ஆண்டு குழந்தை பெற்று இருக்கிறார்.

இருவரும் நாசிக் பகுதியில் கணவன், மனைவி போல் வசித்து வந்தது தெரியவந்தது, இது தொடர்பாக பொலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்