மெட்டி போட்டு காதலனை திருமணம் செய்த நடிகை நிலானி: வீடியோ காட்சிகள் வெளியானது

Report Print Raju Raju in இந்தியா

சின்னத்திரை நடிகையான நிலானியை காதலன் காந்தி லலித்குமார் மெட்டி போட்டு திருமணம் செய்த வீடியோ வெளியாகியுள்ளது.

உதவி இயக்குநர் காந்தி லலித்குமார் தன்னை திருமணம் செய்யுமாறு டார்ச்சர் செய்வதாக காவல்நிலையத்தில் புகார் அளித்தார் நிலானி. இதையடுத்து லலித்குமாரை அழைத்து விசாரித்தது பொலிஸ்.

காவல்நிலையத்தில் இருந்து வீட்டிற்கு திரும்பிய லலித்குமார் கேகேநகர் அருகே தீக்குளித்த நிலையில் உயிரிழந்தார்.

தன்னை திருமணம் செய்துகொள்ள கூறி வற்புறுத்தியதாக புகார் அளித்த நிலானிக்கு காந்தி லலித்குமார் காலில் மெட்டி போட்டு திருமணம் செய்துள்ளார். செப்டம்பர் 4ஆம் திகதி இந்த திருமணம் நடந்துள்ளது.

அன்றைய நாளை தங்களின் திருமண நாளாக இருவரும் அறிவித்த வீடியோ உள்ளது. அதேபோல் காந்தி லலித் குமார் மெட்டி போட்டுவிடும் வீடியோவை நிலானியே தனது கையால் வீடியோ எடுத்துள்ளார்.

மெட்டி போட்ட கையோடு நிலானியின் கால்களை பற்றி முத்தமிடுகிறார்.

இப்படி காந்தியும் நிலானியும் கணவன் மனைவியாக வாழ்ந்துள்ள நிலையில் காந்தி மீது நிலானி ஏன் அப்படியொரு புகார் கொடுத்தார் என்பது குழப்பமாகவே உள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்