கண்முன்னே கொல்லப்பட்ட கணவன்! கருவை கலைக்க சொன்ன தந்தை: கண்ணீர் மல்க விளக்கிய அம்ருதா

Report Print Santhan in இந்தியா

தெலுங்கானாவில் கணவனை பறிகொடுத்த அம்ருதா என் அப்பா கருவை கலைத்துவிடு என்று எண்ணிடம் அடிக்கடி கூறியதாக மிகவும் வேதனையுடன் கூறியுள்ளார்.

தெலுங்கானா மாநிலத்தின் மிர்யலாகுடா என்னும் பகுதியைச் சேர்ந்தவர் பிரனாய் குமார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த அம்ருதா என்ற பெண்ணை காதலித்து வந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் திருமணம் செய்து கொண்டார்.

பிரனாய் தாழ்ந்த சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் அம்ருதாவின் தந்தை மாருதிராவ் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை.

இந்நிலையில் 3 மாத கர்ப்பிணியாக இருக்கும் அம்ருதாவை கடந்த வெள்ளிக்கிழமை பிரனாய் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது கூலிப்படை நபரால் கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.

கண் முன்னே கணவன் கொடூரமாக கொலை செய்யப்பட்டதால், அம்ருதா இன்னும் அதிலிருந்து மீளமுடியாமல் தவித்து வருகிறார்.

இந்நிலையில் அம்ருதா அங்கிருக்கும் ஊள்ளூர் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார். அதில், நாங்கள் இருவரும் கடந்த ஜனவரி மாதம் திருமணம் செய்து கொண்டோம்.

இது என்னுடைய அப்பாவிற்கு பிடிக்கவில்லை, இதனால் நான் அவரிடம் அதிகமாக பேசுவதில்லை, அவருடம் என்னிடம் அதிகமாக பேசமாட்டார்.

எப்போதாவது தான் பேசிக் கொள்வோம். அவர் பேசும் போது எல்லாம் உடனடியாக வீட்டிற்கு வா, அல்லது கருவை கலைத்து விடு என்று கூறுவார்.

கணவனை கொலை செய்வதற்கு முன் கடைசியாக அதாவது புதன் கிழமை என்னிடம் பேசிய அவர் கருவை கலைக்கும் படி கூறினார்.

அதுமட்டுமின்றி அவர் மூன்று வருடங்கள் குழந்தை இல்லாமல் நீங்கள் வாழ்ந்து வந்தால், நான் உங்கள் திருமணத்தை ஏற்றுக் கொள்கிறேன் என்று கூறினார்.

ஆனால் நான் என் குழந்தையை கொலை செய்யமாட்டேன் என்று கூறினேன். என் அப்பா நான் குழந்தை இல்லாமல் இருந்தால், பிரானாயை கொலை செய்துவிட்டு என்னை எளிதாக அழைத்துச் செல்ல திட்டம் தீட்டியிருக்கலாம், ஆனால் தற்போது பிரானாயை இழந்து தவிக்கிறேன் என்று கண்ணீர் மல்க கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments