பார்ப்பவர்களை கதிகலங்க வைத்த புகைப்படம்

Report Print Arbin Arbin in இந்தியா

இந்திய தலைநகர் டெல்லியில் விஷ வாயு தாக்கி கொடூரமாக மாறிய தந்தையின் உடலை பார்த்து கதறும் சிறுவனின் புகைப்படம் வெளியாகி கதிகலங்க வைத்துள்ளது.

டெல்லியின் மோதிநகர் குடியிருப்பு வளாகத்தில் கடந்த வெள்ளியன்று கழிவு நீரை சுத்திகரிக்கும் வேலையில் 5 தொழிலாளர்கள் ஈடுப்பட்டனர்.

சுமார் 30 அடி ஆழமுள்ள செப்டிக் டேங்கை சுத்தம் செய்யும் பணியில் ஈடுப்பட்ட போது அந்த 5 தொழிலாளர்களும் விஷ வாயு தாக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதில் மரணம் அடைந்த ஐவரும் 28 முதல் 30 வயது உடையவர்கள். இந்த ஐவரும் மரணம் அடைந்ததிற்கு அவர்களிடம் போதுமான பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாததே காரணம் என்று காவல் துறையினர் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் இந்த ஐவரின் உடல்களும் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

இதில் மரணம் அடைந்த ஒருவரின் 7 வயது சிறுவன், தனது தந்தையின் உடலை பார்த்து அழும் புகைப்படம் பார்ப்பவர்களின் கண்ணிலும் கண்ணீரை வர வைத்துள்ளது.

வெறும் சடலமாக கிடக்கும் தனது தந்தையின் உடல் விஷ வாயு தாக்கி கொடூரமாக மாறி இருப்பதை அறியாத அந்த சிறுவன், அவரின் முகத்தில் மூடப்பட்டு இருக்கும் துணியை எடுத்து பார்த்து அப்பா.. அப்பா என்று கதறுகிறான்.

இந்த காட்சிகள் மருத்துவமனையில் இருந்த அனைவரையும் உறைய வைத்துள்ளது. மேலும் இந்த புகைப்படத்தை பலரும் சமூகவலைத்தளங்களில் கண்ணீருடன், கோபத்துடனும் பதிவிட்டு வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers