அக்காவிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்: நளினியின் தம்பி உருக்கம்

Report Print Arbin Arbin in இந்தியா

அக்கா விடுதலையாகி வந்ததும், அவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என நளினியின் தம்பி பாக்கியநாதன் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பில் பேசிய நளினியின் தம்பி பாக்கியநாதன், வீட்டுக்கு மூத்த பொண்ணா பிறந்தவங்களை இரண்டாவது அம்மான்னு சொல்வாங்க.

நளினி அக்கா எங்களுக்கு அப்படித்தான். அம்மா நர்ஸாக வேலை பார்த்தவங்க. பகல் ஷிஃப்ட், இரவு ஷிஃப்ட், அவசர டெலிவரின்னு அவங்க ரொம்ப பிஸியா இருப்பாங்க.

அதனால், என்னையும் தங்கையையும், அக்கா நளினிதான் அம்மா மாதிரி பார்த்துக்கிட்டாங்க. சமைச்சு தருவா; எங்களுக்குச் சாதம் ஊட்டிவிடுவா.

அம்மா இரவு ஷிஃப்ட் வேலைக்குப் போயிட்டா கதை சொல்லித் தூங்கவைப்பா. அப்படிப்பட்ட அக்கா இவ்வளவு கஷ்டப்பட்டதுக்குக் காரணம், என்னோட அப்பாவித்தனம்தான். அக்கா விடுதலையாகி வந்ததும், முதலில் அவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.

மட்டுமின்றி மத்தியில் உள்ள பாஜக அரசு, கருணை அடிப்படையில் நளினி உள்ளிட்ட ஏழு பேரையும் விடுதலை செய்யணும் என்ற கோரிக்கையையும் அவர் முன்வைத்தார்.

மேலும், 20 வருஷமா என் குடும்பத்தைக் காப்பாற்ற வேலை கிடைக்காமல், வாழ வீடு கிடைக்காமல் பட்ட பாடுகள் போதும். மறுபடியும் என் முகத்தை உலகத்துக்குக் காட்ட விருப்பமில்லைங்க எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers