இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் கர்ப்பிணி பெண்ணை ரயிலில் இருந்து கீழே தூக்கி வீசிய இளைஞர்களின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இலூரு நகரிலிருந்து ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது.
இதில் நபர் ஒருவர் தனது 4 மாத கர்ப்பிணி மனைவியுடன் பயணம் செய்தார்.
அப்போது அவர்கள் பயணம் செய்த பெட்டியில் இருந்த சில இளைஞர்கள் அப்பெண்ணுக்கு தொல்லை கொடுத்துள்ளனர்.
இதையடுத்து ரயிலானது பவர்பெட் ரயில் நிலையம் அருகில் வந்தபோது அந்த இளைஞர்கள் சேர்ந்து அப்பெண்ணை ஓடும் ரயிலில் இருந்து வெளியில் தூக்கி போட்டனர்.
இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பெண்ணின் கணவரும் ரயிலில் இருந்து கீழே குதித்தார்.
இதையடுத்து காயமடைந்த தம்பதியை மீட்ட அருகிலிருந்தவர்கள் மருத்துவமனையில் சேர்த்தனர்.
இச்சம்பவம் உள்ளூர் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.