இந்த கொலை வீடியோக்கு தான் அதிக லைக் வரும் பாரு: மகள் அம்ருதாவை மிரட்டிய கொடூர தந்தை

Report Print Raju Raju in இந்தியா

இந்தியாவின் தெலுங்கானாவில் கொலை செய்யப்பட்ட ப்ரனாய் என்ற இளைஞரின் மாமனார் தனது மகளிடம் பேசிய விடயம் குறித்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

ப்ரனாய் என்ற இளைஞர் தான் காதலித்து வந்த அம்ருதா என்ற உயர்சாதி பெண்ணை திருமணம் செய்து கொண்ட நிலையில் பெண்ணின் குடும்பத்தினரால் கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.

கர்ப்பமாக இருந்த அம்ருதா ப்ரானாயுடன் மருத்துவமனைக்கு சென்ற நிலையிலேயே ப்ரானாய் கொலை செய்யப்பட்டார்.

இந்நிலையில் அம்ருதாவின் தந்தை மாருதி ராவ் மற்றும் அவரின் சகோதரர் ஷரவன் ஆகிய இருவர் தான் கூலிப்படையை வைத்து ப்ரானாயை கொலை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

ப்ரானாய் - அம்ருதா திருமணம் செய்து கொண்ட வீடியோவை அம்ருதா பேஸ்புக்கில் முன்னர் வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் திருமணத்துக்கு பின்னர் அம்ருதாவை அவரின் தந்தை மாருதி மிரட்டியுள்ளார்.

அதாவது, உன் கணவரை நீ திருமணம் செய்த வீடியோ பேஸ்புக்கில் வாங்கும் லைக்குகளை விட, அவர் கொலை செய்யப்படும் வீடியோ தான் அதிக லைக்குகள் வாங்கும் என மிரட்டியுள்ளார்.

இதை அமிர்தாவே தற்போது கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers