வேறு பெண்ணுடன் தொடர்பு: மனைவியை கொன்றுவிட்டு நாடகமாடிய கணவன் சிக்கியது எப்படி?

Report Print Raju Raju in இந்தியா

சென்னையில் மனைவியை பெல்டால் கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டு தற்கொலை என்று நாடகமாடிய கணவனை பொலிசார் கைது செய்துள்ளனர்.

திருவிக நகரை சேர்ந்த கல்பனா என்ற பெண், கடந்த 11-ஆம் திகதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரது கணவர் சுரேஷ் பொலிசில் புகாரளித்தார்.

இதையடுத்து கல்பனாவின் உடலைக் கைப்பற்றி, பொலிசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதன் அறிக்கையில், கல்பனா கழுத்தை நெரித்துக் கொல்லப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து சுரேஷைப் பிடித்து பொலிசார் விசாரித்தனர்.

அப்போது, வேறொரு பெண்ணுடன் தொடர்பிருப்பதாக கூறி கல்பனா அடிக்கடி சண்டையிட்டு வந்ததாகவும், இதனால் ஆத்திரமடைந்து கழுத்தை நெரித்து தாமே கொன்றுவிட்டதாகவும் கூறினார்.

இதையடுத்து சுரேஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers