கனிமொழிக்கு தக்க சமயத்தில் கமல்ஹாசன் செய்த உதவி

Report Print Arbin Arbin in இந்தியா

தமிழகத்தின் பெரம்பலூர் மாவட்டத்தில் மருத்துவர் படிப்பை தொடர முடியாமல் தவித்த கனிமொழிக்கு உலக நாயகன் கமல்ஹாசன் ரூ 5 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார்.

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை கிராமத்தை சேர்ந்த பிச்சைமணி மற்றும் மல்லிகா தம்பதிக்கு கனிமொழி (21) என்ற மகள் உள்ளார்.

இவர் பெரம்பலூரில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் நான்காம் ஆண்டு படித்து வருகிறார்.

கடந்த 2014-ஆம் ஆண்டு பிளஸ் 2 தேர்வில் 1127 மதிப்பெண்கள் பெற்றார். 191.05 கட்ஆப் பெற்றிருந்தார். அவருக்கு தனலட்சுமி சீனிவாசன் கல்லூரியில் மருத்துவம் பயில இடம் கிடைத்தது.

4-ஆம் ஆண்டு படித்து வரும் மாணவி கனிமொழி அடுத்த ஆண்டுக்கான கல்விக் கட்டணம், தேர்வு கட்டணம் ஆகியவை கட்ட முடியாமல் தவித்து வந்தார்.

இதனால் மாணவியின் படிப்பு கேள்விக்குறியானது. இதுகுறித்து தகவலறிந்த கமல்ஹாசன் மாணவியை சந்தித்து ரூ. 5 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers