அடிக்காதீர்கள் அடிக்காதீர்கள்.. கதறிய பெண்! சரமாரியாக அடித்து உதைத்த திமுக பிரமுகர்

Report Print Kabilan in இந்தியா

தமிழகத்தின் பெரம்பலூர் மாவட்டத்தில் தி.மு.க பிரமுகர் ஒருவர், அழகு நிலையம் நடத்தி வந்த பெண்ணொருவரை சரமாரியாக தாக்கிய வீடியோ வெளியானதைத் தொடர்ந்து, கட்சி நிர்வாகம் அவரை நீக்கியுள்ளது.

பெரம்பலூர் மாவட்டம் பாரதிதாசன் நகரில் அழகு நிலையம் நடத்தி வருபவர் சத்தியா(35). இவருக்கும், அன்னமங்கலத்தைச் சேர்ந்த தி.மு.க பிரமுகர் செல்வகுமார்(52) என்பவருக்கும் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை காரணமாக முன் விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், செல்வகுமார் அழகு நிலையத்தில் புகுந்து சத்தியாவை சரமாரியாக காலால் உதைத்து தாக்கும் காட்சிகள் வாட்ஸ் அப் மற்றும் தொலைக்காட்சிகளில் வெளியானது. இது பொதுமக்கள் மத்தியிலும், தி.மு.கவினர் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

குறித்த வீடியோவில் செல்வகுமார் தாக்கும் போது அடிக்காதீர்கள் அடிக்காதீர்கள் என சத்தியா கதறுகிறார். மற்ற பெண் ஊழியர்கள் அதை தடுக்க முடியால் தவிக்கிறார்கள். ஆனால், செல்வகுமார் காலால் சத்தியாவை எட்டி உதைக்கிறார்.

இச்சம்பவம் நான்கு மாதங்களுக்கு முன்பு நடந்துள்ளது. ஆனால், அப்போது இதுதொடர்பாக சத்தியா பொலிசாரிடம் புகார் தெரிவித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. எனவே, தற்போது சத்தியாவே இந்த வீடியோவை வெளியிட்டது பொலிசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

அதனைத் தொடர்ந்து, பெரம்பலூர் பொலிசார் செல்வகுமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், தி.மு.க பொதுச்செயலாளர் க.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

‘அன்னமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த மாவட்ட ஊராட்சிக் குழு முன்னாள் உறுப்பினர் எஸ்.செல்வகுமார் கழகக் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும் செயல்பட்டு வந்ததால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers