குடும்பத்துடன் தூக்கில் தொங்கிய தொழிலதிபர்! கெட்ட ஆத்மாக்கள் காரணம்?

Report Print Kabilan in இந்தியா

இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் தொழிலதிபர் ஒருவர் ஆத்மாக்கள் தொல்லை செய்ததாக குடும்பத்துடன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத்தின் நரோடாவை சேர்ந்தவர் குணால் திவிவேதி(வயது 45), இவரது மனைவி கவிதா, மகள் ஷ்ரீன், தொழிலதிபராக இருக்கிறார்.

நேற்று இவரை தொடர்பு கொள்ள உறவினர்கள் முயன்ற போது, போனை யாரும் எடுக்கவில்லை. தொடர்ந்து முயற்சித்தும் போனை எடுக்காத காரணத்தால் சந்தேகமடைந்தவர்கள், வீட்டுக்கு வந்துள்ளனர்.

அங்கே மூவரும் தூக்கில் சடலமாக தொங்க, குணாலின் அம்மா ஜெயஸ்ரீ மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்ததுடன், பொலிசுக்கும் தகவல் அளித்தனர்.

விரைந்து வந்த அதிகாரிகள் விசாரணை நடத்தியதில், மூன்று பக்க கடிதம் ஒன்று கிடைத்தது. அதில், எல்லோரும் என்னை குடிகாரன் என்கிறார்கள், நான் விரும்பி அதை செய்யவில்லை, கெட்ட ஆன்மாக்கள் இதை செய்ய வைக்கின்றன.

அம்மா, நீயே என்னை புரிந்துகொள்ளவில்லை, பலமுறை கெட்ட ஆன்மாக்கள் பற்றி கூறியிருக்கிறேன், நீ நம்பவில்லை என எழுதப்பட்டிருந்தது.

எனவே மந்திர சக்தி விடயங்களால் அதிகம் பாதிக்கப்பட்டு குணால் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

HT

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers