தன்னை விட வயது குறைவான ஆண் நண்பரை திருமணம் செய்யவுள்ள திருநங்கை! ஈர்ப்பு இருந்தது என கூறும் ஐஸ்வர்யா

Report Print Santhan in இந்தியா

இந்தியாவில் திருநங்கை அதிகாரி ஒருவர் தன் ஆண் நண்பரை திருமணம் செய்யவுள்ளார்.

ஒரிசா மாநிலத்தின் கந்தமால் மாவட்டம், கானபாகிரி கிராமத்தில் பிறந்தவர் ஐஸ்வர்யா(34). இவர் கடந்த 2010-ஆம் ஆண்டு ஒரிசா மாநில நிதித்துறையில் ஆண் ஊழியராகப் பணியில் சேர்ந்தார்.

இதையடுத்து 2014- ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் திருநங்கைகளை மூன்றாம் பாலினமாக அறிவித்ததையடுத்து தன்னை திருநங்கை என்று வெளிப்படையாகத் தெரிவித்தார். அடுத்த ஆண்டே உறுப்பு மாற்று அறுவைசிகிச்சையும் செய்துகொண்டார்.

இந்நிலையில் அரசியலமைப்புச் சட்டத்தில் 377 பிரிவான தன்பாலின உறவை குற்றம் என்பதை உச்சநீதிமன்றம் ரத்து செய்து தீர்ப்பளித்ததையடுத்து இவர் தன் ஆண் நண்பரை திருமணம் செய்யவுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், ரதிகந்தா பிரதான் என்னுடைய பெயராக இருந்தது. சிறுவயதில் இருந்தே என்னுடைய சகோதரியின் நகைகள், உடைகள் அணிவது எனக்கு விருப்பமாக இருந்தது.

என்னுடைய அம்மா இல்லாதநேரத்தில் அவரின் நகைகளை எடுத்துப் போட்டு அழகுபார்ப்பேன். ஆனால் நான் ஆணாக நடந்து கொள்ள வேண்டும் என்று என்னுடைய தந்தை அடிக்கடி கூறி அடித்தார்.

நான் படிக்கும் காலத்தில் என்னை பலர் கிண்டல் செய்தனர். பலர் என்னை அவமானப்படுத்தினார்கள். 2010-ஆம் ஆண்டு நான் ஓடிசா மாநில அரசில் வணிகவரித்துறை பிரிவில் எனக்கு வேலை கிடைத்தது.

வேலை கிடைத்தபின் என்னுடைய அடையாளத்தை நான் யாரிடமும் காட்டிக்கொள்ளவில்லை. ஆனால், நான் ஆண் என்ற அடையாளத்துடன் வாழ்வதில் எனக்கு விருப்பமில்லை.

2014-ம் ஆண்டு திருநங்கைகளை மூன்றாவது பாலினமாக அறிவிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதைத் தொடர்ந்து நான் 2015-ஆம் ஆண்டு உடல்ரீதியான அறுவைசிகிச்சை செய்து நான் பெண்ணாக மாறினேன். அதன் பின் எனது பெயரை ஐஸ்வர்யா ரிதுபர்னா பிரதான் என்று மாற்றிக்கொண்டேன்.

இதைத் தொடர்ந்து என்னுடைய ஆண் நண்பர் ஒருவர் 3 ஆண்டுகளுக்கு முன்பு காதலை தெரிவித்தார். என்னைக் காட்டிலும் வயது குறைவாக இருந்ததால் நான் அவரை ஏற்கவில்லை.

அவர் மீது ஒரு ஈர்ப்பு இருந்தது. அதன் பின் அவரின் உண்மையான அன்பை புரி்ந்துகொண்டு நானும் விரும்பினேன்.

கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக அவரும், நானும் காதலித்து வருகிறோம். கடந்த ஒரு ஆண்டுக்கு முன் திருமணம் செய்ய என்னை அணுகினார்.

ஆனால், உச்ச நீதிமன்ற தீர்ப்புக்காக நான் காத்திருந்தேன். இப்போது ஒரேபாலின உறவு தவறில்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ள நிலையில், என் காதலரை விரைவில் திருமணம் செய்ய இருக்கிறேன்.

நான் நான் ஒரு திருநங்கை என்று என் காதலரின் குடும்பத்தாருக்கு தெரியாது. நான் அவரிடம் பலமுறை கூறி குடும்பத்தாரிடம் கூறுங்கள் எனத் தெரிவித்தேன். ஆனால், அவர் தெரிவிக்கவில்லை.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers