திருமணம் செய்யாமல் ஒன்றாக வாழ்ந்த பெண்ணை கொலை செய்த நபர்: பின்னர் எடுத்த முடிவு

Report Print Kabilan in இந்தியா

இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் நபர் ஒருவர், தன்னுடன் வாழ்ந்து வந்த பெண்ணை கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூருவில் உள்ள டொம்லூரை எனும் பகுதியைச் சேர்ந்தவர் ரவீந்திரா(69). துணிக்கடை நடத்தி வந்த இவர், தனது கடையில் வேலை செய்து வந்த உமா(60) என்கிற பெண்ணுடன் திருமணம் செய்யாமல் ஒன்றாக வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக ரவீந்திராவின் கடை பூட்டப்பட்டு கிடந்துள்ளது. அத்துடன் நேற்று முன்தினம் இரவு அந்த கடையில் இருந்து துர்நாற்றம் வீசியதைத் தொடர்ந்து, சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் பொலிசாருக்கு தகவல் அளித்தனர்.

அதன் பின்னர் அங்கு வந்த பொலிசார் துணிக்கடையின் பூட்டை உடைத்து, உள்ளே சென்று பார்த்தபோது ரவீந்திரா தூக்கில் பிணமாகவும், உமா தரையில் இறந்த நிலையிலும் கிடந்துள்ளனர்.

பின்னர் அவர்களது உடல்களை கைப்பற்றிய பொலிசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில், இச்சம்பவம் குறித்து பொலிசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ரவீந்திராவுக்கு வங்கியில் வாங்கிய கடனை திரும்ப செலுத்தாததால் வீட்டை ஜப்தி செய்ய நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இதனால் மனம் உடைந்து அவர் தற்கொலை செய்துகொண்டதாக பொலிசார் தெரிவித்தனர். ஆனால் உமாவை கொலை செய்தது ஏன் என்பது மர்மமாக இருப்பதால், பொலிசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers