பாலியல் புகாரை வாபஸ் பெற்றால் ரூ. 5 கோடி தருகிறேன்: அதிர வைத்த பாதிரியார்

Report Print Raju Raju in இந்தியா

கேரளாவில் தன் மீதான பாலியல் புகாரை வாபஸ் பெற்றால் ரூ. 5 கோடி தருவதாக பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரியின் சகோதரருக்கு பாதிரியார் பிராங்க்கோ ஆசை காட்டுவதாக புகார் எழுந்துள்ளது.

கோட்டயத்தை சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர் பாதிரியார் பிராங்க்கோ முலாக்கல் என்பவர் மீது பாலியல் வன்கொடுமை புகாரளித்தார்.

இதில் 2014-லிருந்து 2016 வரை பாதிரியார் தன்னை பாலியல் கொடுமை செய்ததாக கூறினார்.

இந்த புகார் அளிக்கப்பட்டு 75 நாளாகியும் பாதிரியார் மீது நடவடிக்கை எடுக்கப்படாததை கண்டித்து கொச்சியில் கன்னியாஸ்திரிகள் போராட்டம் நடத்தினர்.

இதனிடையில் பாதிரியார் பிராங்க்கோ செய்தியாளர்களை நேற்று சந்திக்கையில், எனக்கு எதிராக சதி நடக்கிறது.

முன்பு அந்த கன்னியாஸ்திரியை ஒரு முறை கண்டித்தேன், அதை மனதில் வைத்தே இப்படி செய்வதாக கூறினார்.

இந்நிலையில் தன் மீதான பாலியல் புகாரை வாபஸ் பெற்றால் ரூ. 5 கோடி தருவதாக கன்னியாஸ்திரியின் சகோதரருக்கு பிராங்க்கோ ஆசை காட்டுவதாக புகார் எழுந்துள்ளது.

இது குறித்து கன்னியாஸ்திரியின் சகோதரர் கூறுகையில், பிராங்க்கோ மற்றும் இரண்டு பாதிரியார்கள் என்னை அனுகி ரூ. 5 கோடி தருவதாக கூறியதாக தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers