15 வயதில் வீட்டை விட்டு ஓடிப்போன சிறுவன்: 7 வருடம் கழித்து பேஸ்புக்கால் நடந்த ஆச்சரியம்

Report Print Raju Raju in இந்தியா

இந்தியாவின் ஐதராபாத்திலிருந்து 7 ஆண்டுகளுக்கு முன்னர் ஓடி போன சிறுவன் பேஸ்புக் உதவியால் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளான்.

ஐதராபாத்தில் தனது அக்கா வீட்டில் வசித்து வந்தான் சுஜித். பள்ளியில் படித்து வந்த சுஜித் கடந்த 2011-ஆம் ஆண்டு வீட்டை விட்டு ஓடியுள்ளார்.

இதையடுத்து சுஜித்தை காணவில்லை என அக்கா கணவர் அஜித்குமார் பொலிசில் புகார் அளித்தார்.

இதையடுத்து பொலிசார் சுஜித்தை தேடிய போதும் அவர் கிடைக்கவில்லை.

இந்நிலையில் ஹைதராபாத்திலிருந்து மும்பைக்கு ஓடிய சுஜித் அங்கு கேட்டரிங் காண்ட்ராக்டரிடம் வேலை செய்து வந்துள்ளார்.

இதனிடையில் சுஜித்தை பேஸ்புக் மூலம் தேடி வந்த அஜித்குமார், அவர் செல்ல பெயரில் ஒரு ஐடி இருப்பதை பார்த்து பிரண்ட் அழைப்பு கொடுத்தார்.

ஆனால் அது தனது மாமா என்பதை கண்டுப்பிடித்த சுஜித் அழைப்பை ஏற்கவில்லை. மேலும் தனது பெயரையும் மாற்றியுள்ளார்.

இதையடுத்து அது காணாமல் போன சுஜித் தான் என்பதை அறிந்த அஜித்குமார் இது குறித்து சைபர் கிரைம் பொலிசிடம் தெரிவித்துள்ளார்.

அவர்கள் சுஜித் பேஸ்புக்கை ஆய்வு செய்து அவர் இருக்கும் இடத்தை கண்டுப்பிடித்தனர்.

தற்போது 23 வயதாகும் சுஜித்தை பொலிசார் ஐதராபாத்துக்கு அழைத்து வந்து குடும்பத்தாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers