கணவன் இறந்த சில மணி நேரத்தில் குழந்தை பெற்ற கர்ப்பிணி பெண்!

Report Print Vijay Amburore in இந்தியா

பெங்களூரில் கத்தியால் குத்தப்பட்ட கணவன், இறந்தது தெரியாமலே கர்ப்பிணி பெண் ஒருவர் ஆண் குழந்தை பெற்றெடுத்துள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.

பெங்களூரு பனசங்கரி பகுதியை சேர்ந்தவர் 31 வயதான குரு சங்கர். இவர் பெல்லந்தரில் உள்ள நிறுவனம் ஒன்றில் கம்ப்யூட்டர் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார்.

இவர் கடந்த 6-ம் தேதியன்று கம்ப்யூட்டர் மையத்திற்கு பிரிண்ட் அவுட் எடுக்க சென்றுள்ளார். அங்கு கடையின் உரிமையாளர் கார்த்திக் மற்றும் குரு பிரசாத் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த கடை உரிமையாளர், குரு பிரசாத் தலையில் திருப்புளியல் குத்தியுள்ளார். இந்த சம்பவத்தில் பலத்த காயமடைந்த குரு பிரசாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் அவர் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் அறிந்த பொலிஸார் உடனடியாக வழக்கு பதிவு செய்து கார்த்திக்கை கைது செய்தனர்.

இதற்கிடையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவருடைய மனைவி மமதாவிற்கு திடீர் பிரசவ வலி ஏற்பட்டது. இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மமதாவிற்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனால் மமதா மகிழ்ச்சியாக இருந்தாலும், கணவர் இறந்த செய்தியினை இன்னும் உறவினர்கள் அவருக்கு தெரியப்படுத்தவில்லை.

இந்த சம்பவமானது உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers