57 பேர் பலியான கோர விபத்து குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்!

Report Print Kabilan in இந்தியா

தெலுங்கானா மாநிலத்தில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் 57 பேர் பலியான நிலையில், ஓட்டுநர் உடல் நலக்குறைவுடன் பேருந்தை ஓட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் ஜக்தியால் மாவட்டத்தில் நேற்று ஏற்பட்ட பேருந்து விபத்தில் 57 பேர் பலியாகினர். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், விபத்துக்கான காரணம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

விபத்துக்குள்ளான பேருந்தை ஸ்ரீனிவாஸ் என்கிற ஓட்டுநர் ஓட்டியுள்ளார். 30 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த மூத்த பேருந்து ஓட்டுநரான அவர், கடந்த ஆகஸ்ட் 15ஆம் திகதி தெலுங்கானா மாநில அரசு பேருந்து கழகம் சார்பில் பேருந்து பாதுகாப்புக்கான சிறந்த ஓட்டுநர் விருதை பெற்றிருந்தார்.

இந்நிலையில், விபத்துக்கு முன்னர் உடல் நலக்குறைவு காரணமாக ஸ்ரீனிவாஸ் விடுப்புக்கு விண்ணப்பித்துள்ளார். ஆனால், ஆள் பற்றாக்குறையால் உயர் அதிகாரிகள் அவரது விண்ணப்பத்தை நிராகரித்ததாக கூறப்படுகிறது.

இதனால், உடல் நலக்குறைவுடனே அவர் பேருந்தை ஓட்டியிருக்கலாம் என தெரிகிறது. பேருந்து விபத்துக்குள்ளானதில் ஸ்ரீனிவாஸின் இரண்டு கால்களும் நசுங்கின. அதன் பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.

IANS

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers