10 வயது சிறுமியின் உடலில் இருந்து வியர்வை போல வெளியேறும் ரத்தம்: பரிதாப நிலை

Report Print Deepthi Deepthi in இந்தியா

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 10 வயது சிறுமியின் உடலில் இருந்து வியர்வை போன்று ரத்தம் வெளியேறியுள்ளதால் அச்சிறுமி அவதிக்குள்ளாகியுள்ளார்.

நாகராஜ் - லட்சுமி தேவி தம்பதியினரின் மூன்றாவது மகள் அர்ச்சான 5 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு திடீரென மூக்கில் இருந்து ரத்தம் வெளியேறியதைடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

அடுத்த சில நாட்களில், கண்கள், மூக்கு, காது, கைகள் உள்ளிட்ட பல இடங்களில் ரத்தம் வந்ததால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். ஆனால் சிகிச்சை பெற்றும் ரத்தம் வெளியேறுவது நிற்கவில்லை. தொடர்ந்து ரத்தம் வெளியாகிகொண்டே இருக்கிறது.

இதுகுறித்து தந்தை கூறியதாவது, நான் கூலித்தொழிலாளி இதுவரை 1 லட்சத்திற்கு மேல் கடன்வாங்கி எனது மகளுக்கு மருத்துவ செலவு செய்துள்ளேன். மேற்கொண்டு சிகிச்சை தொடர போதிய வசதி இல்லை என கூறியுள்ளார்.

இதுதொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குநர் மருத்துகூர் அசோக்குமார் கூறியதாவது, இதுவரை சிறுமியின் உடலில் இருந்து 4 முறை ரத்தம் வெளியேறியுள்ளது. பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டு உடலில் நோய்கான அறிகுறிகள் ஏதும் இல்லை. சிறுமிக்கு ஏற்பட்டுள்ள இவ்வகை பாதிப்பு த்ரோபாஸ்டினியா எனப்படுத் ரத்த ஒழுங்கின்மை காரணமாக ஏற்படுத் ரத்தப்போக்கு.

இதுதொடர்பாக ஆய்வுகள் மேற்கொள்ள சிறுமியை சென்னை குழந்தைகள் நல மருத்துவமனைக்கு பரிந்துரை செய்துள்ளோம். அவரது உடலில் ரத்தம் வெளியேறினாலும், அவர் சீரான ஆரோக்கியத்துடன் இருக்கிறார் என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers